இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

இதனை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி கட்சியின் அடுத்த தலைமைத்துவத்துக்காக ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன ஆகியோர் உட்பட தனது பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது இந்த தீர்மானத்தை ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைவராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.