இலங்கை

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கண்டி தலதா மாளிகையில் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வகிக்கப்படும் அமைச்சுக்களும் இதில் அடங்கும்.

அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.