இலங்கை

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “எனது முன்னைய ஆட்சியின் போது வடக்குப் பகுதியில் இருந்த கடுமையான சூழ்நிலைகளின் மத்தியிலும் பெருமளவு அபிவிருத்தி பணிகளை செய்தேன். துரதிஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக குழப்பப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுக்கவுள்ளோம், துரிதப்படுத்தவுள்ளோம்.

இனம் மற்றும் கலாசார பின்னணிகளை கடந்து எங்கள் அரசாங்கம் அனைத்து பிரஜைகளினதும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயற்படும். மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்திற்கான நீர்ப்பாசனம், ஏற்றுமதிகளை தரமுயர்த்துதல், கல்வி மற்றும் மருத்துவமனைகளின் வசதிகள் தொடர்பில் அவசர முன்னுரிமைகள் வழங்குவதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன.” என்றுள்ளார்.

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.