இலங்கை

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாடு இராணுவ மயமாவதாக நாம் கூறியபோது அதனை அரசாங்கமும், அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகளும் மறுத்தன. நாட்டின் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உள்நாட்டு அலுவல்கள் விடயங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும். அதேவேளை சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும்.

ஒரு நாட்டின் சிவில் நிர்வாகங்களுடனேயே சர்வதேச நாடுகள் தொடர்பினை பேண விரும்பும் நிலையில், அந்தநிலை தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிவில் நிர்வாகத்தினை ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அத்தனை தமிழ் அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும்.” என்றுள்ளார்.

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.