இலங்கை

பொதுத் தேர்தலில் எந்தவொரு அணியினருக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்கிற போதிலும், மக்கள் வழங்கிய தீர்ப்பினை மதிக்க வேண்டியது கடமையாகும் என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கிடையே மாத்திரமல்ல, ஒவ்வொரு கட்சிக்குள்ளும் பல முரண்பாடுள் காணப்பட்டன. ஜனநாயக விரோதப் போக்கும் எழுந்திருந்தன. இவ்வாறான நிலை வேதனையளிக்கும் ஒன்றாகும். இதனால் மக்கள் குழப்பமும் கவலையும் அடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தரப்பும் மறுதரப்பை விமர்சனம் செய்வதிலும் பார்க்க சுயவிமர்சனம் செய்து தத்தமது நடவடிக்கைகளை நெறிப்படுத்திக் கொள்வது ஆரோக்கியமானதாக அமையும்.

தீய நோக்கங்களுக்காக தவறான கருத்துகள் பதிவிடப்படுவதும் அவற்றின் உண்மைத்தன்மை அறியாது, அவை பகிரப்படுவதும் குழப்பநிலைகள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். கருத்துகள் பதிவிடப்படும்பொழுது பிறரின் மனம் நோகாது சரியான, நாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களுடன் உண்மையை எழுதிக்கொள்வது தமிழரின் மரபுக்கு வலுச்சேர்க்கும்.

ஒருவரிலே பழி தீர்ப்பதற்காக ஊடகங்களைப் பயன்படுத்துவது அறம் ஆகாது. இவை சமூகங்களுக்கிடையே பிரிவினையை வளர்த்துக்கொள்வதற்கே வழிவகுக்கும். சமூக ஒற்றுமை என்பது தேசியத்தின் அடிநாதம்.

ஒற்றுமையில்லாது வெறுப்புகள் நீரூற்றி வளர்க்கப்படின், தேசியம் மடிந்து போகும் ஒரு துர்ப்பாக்கிய நிலை தோன்றலாம். ஒரு சமூகம் அங்கு நடைபெறும் நல்ல விடயங்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துமாயின், அது வளர்ச்சி பெறுவதுடன் ஒற்றுமையும் மேலோங்கும். எதையும் சந்தேகக் கண்ணுடன் நோக்கி தீய சம்பவங்களை மட்டுமே வடித்தெடுத்து அநாகரிகமாக விமர்சிப்பது பிரிவுகளை ஆழமாக்கும்.

“காலத்தின் தேவைகருதி தமிழ் மக்கள் பேரவையானது தமக்கென ஒரு புதிய யாப்பை அறிமுகம் செய்யவிருக்கின்றது. இது தேர்தல் அரசியல் கடந்து தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும் அவர்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வழிசமைக்கும். இந்த முயற்சியிலே பொது அமைப்புகளினதும், பொதுமக்களினதும் பெரும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுமக்கள், அரசியல்வாதிகளை வழிநடத்தும் ஒரு பொறிமுறை நோக்கி நகர முயற்சி எடுக்க தமிழ் மக்களை அணிதிரள அழைக்கின்றோம்” என்றுள்ளது.

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.