இலங்கை

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் சரி வடக்கு, கிழக்கின் தனித்துவங்களைப் பாதுகாப்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் அமைச்சரவை முழுக்க முழுக்க சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நிறுவக்கூடிய வகையில் குடும்பத்தின் ஆட்சியினை நிலை நிறுத்தக்கூடிய வகையிலும் தான் இந்த ஆட்சியின் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது

தமிழ் மக்களின் எதிர்காலம் என்பது மிகவும் கேள்விக்குரிய காலகட்டமாக இருக்கின்றது தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளார்கள்.

குறிப்பாக முல்லைத்தீவு மண் பறிபோகக்கூடிய நிலை இருக்கின்றது. அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது நாடாளுமன்றம் சென்றுள்ள அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியமான கடமை தமிழ் மக்களின் இருப்புக்களை பாதுகாப்பது.

தமிழர்களின் மண் பாதுகாக்கப்படவேண்டும். வடக்கு கிழக்கு நிலத் தொடர்ச்சி என்பது பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்காக உலகத்தின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

வந்துள்ள அரசு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்கான அரசாங்கம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் கொள்கை ரீதியாக இவ்வாறான விடயங்களில் அவர்கள் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு ஒன்றிணையாமல் தனித்து செயற்படுவோம் என்பது வெளியில் பேச்சளவில் சரியாக இருந்தாலும் செயற்பாட்டினை பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கினை சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் சரி வடக்கு,கிழக்கின் தனித்துவங்களும் அந்த மண்ணின் இருப்பும் பாதுகாக்கப்பட வேணும் என்பது மிக முக்கியமான விடயமாகும்.

இந்த விடயத்தில் ஒற்றுமையாக செயற்படவேண்டிய தேவையுள்ளது. இல்லாவிட்டால் கடுமையான நிலையினை எதிர்நோக்கும் கட்டத்தில் நாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம்.” என்றுள்ளார்.

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.