இலங்கை

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

நினைவு நிகழ்வுகளுக்கு இராணுவமும் பொலிஸாரும் தடைகளை ஏற்படுத்த முனைந்த போதும், நினைவேந்தல் நிகழ்வு அதனையும் மீறி நடத்தப்பட்டுள்ளது.

காலை 6.15 மணிக்கு விமானத்தாக்குதல் இடம்பெற்ற இடைக்கட்டு செஞ்சொலை வளாகப்பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 6.45 மணிக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

பின்னர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபை முன்னால் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்களால் அதே இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் நினைவேந்தல் இடம்பெறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு வளைவிற்கு அருகில் நினைவேந்தல் நடத்த பொலிஸார் தடை விதித்திருந்தனர்.

இருந்தபோதிலும் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அந்த இடத்திற்கு சென்றபோது பொலிஸார தடைவிதித்துள்ளனர்.

எனினும், வழமைபோல் நிகழ்வு செய்யும் அதே இடத்தில் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

நினைவேந்தல் இடம்பெற்ற பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் பொலிஸார் மற்றும் அரச புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு அஞ்சலி நிகழ்வினை மேற்கொள்பவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர்.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.