இலங்கை

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குணநாயகம், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஶ்ரீதரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், நறைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டதாகவும் அனைவரது கருத்துக்களும் கேட்டறியப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமன முடிவில் மாற்றம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு எதிர்வரும் 29ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.