இலங்கை

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக, நாடு தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள சமஷ்டி ஆட்சி முறையை நோக்கி செல்லவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பேட்டியின் விபரம் வருமாறு,

கேள்வி: ஜே.வி.பி ஏன் 20வது திருத்தத்தினை எதிர்க்கின்றது?
பதில்: 20வது திருத்தத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் என்னசெய்ய முயல்கின்றது என்றால் ஜனாதிபதிக்கு முழு அதிகாரத்தையும் வழங்க முயல்கின்றது. இது ஆபத்தானது. இது அரசியலமைப்பு சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கலாம் இதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். மேலும் உத்தேச 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியால் அவசர சட்டங்களை கொண்டுவரமுடியும். அமைச்சரவையில் அங்கம் வகிக்ககூடிய அமைச்சர்களின் எண்ணிக்கையை மாற்றமுடியும். கணக்காய்வு ஆணைக்குழுவையும் அவர் இரத்து செய்யமுடியும். 20வது திருத்தம் நடைமுறைக்கு வந்ததும் இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறை காணப்படாது. இதன்காரணமாக நாட்டின் நிதி ஸ்திரதன்மையை பாதிக்கும்.

கேள்வி: இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் பாராளுமன்றம் செல்வது குறித்தும் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களை பாராளுமன்றத்திற்கு அனுமதிப்பது குறித்து நாங்கள் விவாதிக்கவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். பாராளுமன்ற உறுப்பினர்களாக நாங்கள் மேற்கொள்ளும் சத்தியப்பிரமாணத்துக்கும், இன்னொரு நாட்டின் பிரஜையான பின்னர் நபர் ஒருவர் செய்யும் சத்தியப்பிரமாணத்துக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. மேலும் இது பொதுமக்களின் பிரதிநிதிகளின் நாட்டிற்கும் ஆட்சி முறைக்குமான விசுவாசம் குறித்த கேள்வியை எழுப்புகின்றது.

கேள்வி: நகல் வடிவத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பது குறித்து ஆராய்கின்றீர்களா?
பதில்: உத்தேச திருத்தம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்வது அவசியம் என நாங்கள் கருதவில்லை. 20வது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ள விதம் காரணமாக நாங்கள் நீதிமன்றம் செல்ல முடியாது. நீதிதுறை ஜனநாயகம் பறிபோவதற்கு எதிராக சவால் விடுக்காது. குறிப்பிட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா அல்லது திருத்தத்தில் உள்ள விடயங்களுக்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியமா என்பதை மாத்திரம் நீதிமன்றத்தினால் தீர்மானிக்க முடியும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் பாராளுமன்றத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சிமுறை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி: நாட்டுக்கு மிகவும் பொருத்தமான ஆட்சி முறை என்ன?
பதில்: இனப்பிரச்சினைக்கான தீர்வாக, நாடு தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ள சமஸ்டி முறையை நோக்கி செல்லவேண்டும். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் காரணமாக கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது என்பது ஒருபோதும் நிறைவேறாது. நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வி இதனை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

கேள்வி: எங்கள் அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான செல்வாக்கை இந்தியா செலுத்துவது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: 13வது திருத்தம் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எங்கள் இறைமைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. நாட்டில் ஆட்சி முறை அல்லது அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு வெளிநாடுகள் செல்வாக்கு செலுத்த நாங்கள் அனுமதிக்ககூடாது. பாராளுமன்ற ஜனநாயக நாடு என்ற வகையில் அவர்களின் வேண்டுகோள்களுக்கு நாங்கள் அடிபணிய கூடாது.

 

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.