இலங்கை

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்திற்கு அமையவே நாட்டிற்கு முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

“விடயங்களை ஆழமாக ஆராய்ந்து அரசியலமைப்பை தயாரிக்க வேண்டியுள்ளது. மக்கள் ஆணையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “20வது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரம் பெற்றுக்கொடுக்கப்படுவதாகவும் அது ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சில தரப்பினர் தெரிவித்து வருவது தவறான சிந்தனையாகும். 20வது அரசியலமைப்பு திருத்தம் நாட்டின் அரசியல் யாப்பை மாற்றுவதற்கான முதலாவது நடவடிக்கையாகும்.

காலத்திற்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படவேண்டும். முழுமையான அரசியலமைப்பு தயாரிப்பதானது முக்கியமானது. அதற்காக அனைவரினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதும் அவசியம். அதற்காக சில காலம் எடுக்கும்.

தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு அதற்காக நாம் முழுமையான காலத்தை எடுத்துக்கொள்ள முடியாததால், 20வது அரசியலமைப்பு திருத்தம் அவசியமாகிறது.

அரசாங்கமே அரசியலமைப்பை முன்வைக்கின்றது. அதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் அதனை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. அதேவேளை அது தனி நபரொருவரினால் தயாரிக்கப்பட்டது அல்ல.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தலைவருக்கு நாட்டின் பொறிமுறையை தயாரிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் உரிமை இருப்பது அவசியம்.” என்றுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.