இலங்கை

கருணா அம்மானை இனியும் நம்பினால் அம்பாறை மாவட்ட தமிழர்கள் அழிய வேண்டி வரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். 

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கலையரசன் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் ஏற்பட்ட இன ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். கல்வியாளர்கள், புத்திஜீவிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள். தொன்மையான பூர்வீக நிலம் கட்டம் கட்டமாக அழிக்கப்பட்டு தமிழர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழந்திருக்கின்றார்களா என்ற நிலை தோற்றுவிக்கப்படும் .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு எதிராக ஒருபோதும் செய்யப்படாது. இந்த அரசு தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தி தருவதாக கொடுத்த வாக்குறுதியை நம்பி வாக்களித்தனர், அதே போன்று 2020 பாராளுமன்ற தேர்தல் அரசு வழங்கிய வாக்குறுதியை நம்பி 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தமிழ்த் தேசியத்திற்கு எதிராக வாக்களித்தனர். இது கல்முனை மக்களுக்கு எதிராக கிடைத்த ஏமாற்றம் அல்ல. இந்த நாட்டில் தொடராக அரசாங்கங்கள் இதனையே செய்து வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது இருப்புக்களை பாதுகாக்க இலட்சிய சிந்தனையோடு பயணிக்கின்றது .

2009 போராட்டம் மௌனிக்கப்பட்ட கையோடு 13வது திருத்த சட்டத்தில் கூடுதல் அதிகாரங்களை வழங்க போவதாக கூறிய அரசு 2020 ஆண்டில் 19ஐ நீக்கி 20வது சீர்திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட அரசு பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு எந்த ஒரு நீதியையும் ஒருபோதும் தர போவதில்லை என குறிப்பிடுகின்றது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற கருணா வாக்கெண்ணும் நிலையத்தில் வைத்து தமிழ்த் தரப்பில் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது என்பதனை அறிந்தவுடன் எனது பணி நிறைவேறியது என வெளியேறினார். யுத்தம் நடைபெற்ற போது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர் தான் இந்த கருணா. இவரை இன்னும் நம்பினால் தமிழர்கள் இனி அழியப்போகின்றோம் என்ற செய்தியை தான் குறிப்பிடுகின்றேன்.” என்றுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.