இலங்கை

அடிப்படை உரிமைகளில் ஒன்றான அஞ்சலி செலுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுவது தொடர்பாக சாத்வீக வழியில் போராடுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். 

யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்கால சூழ்நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து எடுக்கப்படவேண்டிய முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத தமிழ்க் கட்சியின் பிரதிநிதிகள் யாரும் குறித்த கூட்டத்தில் பங்கெடுத்திருக்கவில்லை.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.