இலங்கை

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை வெற்றி கொண்டது போல, நாட்டின் பொருளாதார சவால்களையும் வெற்றி கொள்வோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

“கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் சிறந்த செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்திய நாடுகளில் இலங்கையும் முன்னிலை வகிக்கின்றது. ஆகவேதான், உலக நாடுகளின் தலைவர்களும் இதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நாட்டின் பொருளாதார சவால்களும் இதேபோன்று வெற்றி கொள்ளப்படும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால் மேலும் கூறியுள்ளதாவது, “தெளிவான முறையான செயற்றிட்டத்தின் கீழ், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வங்கித் துறை வலுப்படுத்தப்படுவதோடு, தொழில் முயற்சியாளர்களையும் பாதுகாப்பது அவசியமாகும்.” என்றுள்ளார்.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.