இலங்கை

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளது. 

20வது அரசியலமைப்பு திருத்தத்தை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவில் அமைச்சரவை அமைச்சர்களான உதய கம்மன்பில, அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேமநாத் சி.தொலவத்த ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.