இலங்கை

நடப்பு ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதம் குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கணித்துள்ளது. 

இது தெற்காசிய நாடுகளுக்குள் மூன்றாவது மோசமான பாதிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதும், தற்போது நாடு கொரோனா நெருக்கடியைக் கடந்து வாழ்வாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் மீண்டு வருகிறது என ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகளவிலான கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்படுவதுடன், தெற்கு ஆசியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 6.8 வீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாலைதீவின் பொருளாதாரம் 20.5% ஆக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தெற்காசியாவில் இந்தியா ஒன்பது வீதமாகவும் பாகிஸ்தானின் பொருளாதாரம் 0.4 வீதமாகவும், ஆப்கானிஸ்தானில் 5 வீதமாகவும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 2020ஆம் ஆண்டில் பங்களாதேஷின் பொருளாதாரம் 5.2 வீதமாகவும் பூட்டானின் பொருளாதாரம் 2.4 வீதமாகவும் மற்றும் நேபாளத்தின் பொருளாதாரம் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.