இலங்கை

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

அதற்குக் கிடைக்கும் பதிலைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிப்பதென்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கலந்துகொண்டன.

உடனடியாகப் போராட்டங்கள் எதனையும் முன்னெடுப்பதில்லை எனவும், ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் முதலில் கோரிக்கைகளை முன்வைப்பது எனவும், அதற்குக் கிடைக்கும் பதிலைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையைத் திட்டமிடுவதெனவும் இங்கு முடிவெடுக்கப்பட்டது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.