இலங்கை

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இராஜகிரியவிலுள்ள கொரோனா கட்டுப்படுத்தல் தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் சமூகத்தினுள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெரும்பாலானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்படுகிறது.

எனினும் சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உற்சவங்கள் நடத்தப்படும்போதும் பொறுப்பற்று செயற்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல்களிலுள்ள ஊழியர்களும் சுகாதார பாதுகாப்புடன் பொறுப்பாக செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம்.” என்றுள்ளார்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.