இலங்கை

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீது உரையாற்றியபோது, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “20வது திருத்தச் சட்டமூல வர்த்தமானி வெளியே வந்தவுடன், நாட்டு மக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்கள். ஆளும் தரப்பு உறுப்பினர்களே இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டார்கள். இதனால்தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்காக குழுவொன்றை ஸ்தாபித்தார்.

20இற்கு ஆதரவாக இன்று குரல் எழுப்பும் உறுப்பினர்கள், இன்னும் சில வருடங்களில் மக்கள் மத்தியில் இதற்காக மன்னிப்புக் கேட்பாளர்கள். இது உறுதியாகும். ஏனெனில், கடந்த காலங்களில் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் பிற்காலத்தில் இதனையிட்டு மன்னிப்புக் கேட்டார்கள். 20இன் ஊடாக ஆளும் தரப்புக்கு தான் முதல் அடி விழுந்துள்ளது. இப்படி தங்களுக்கு இதன் ஊடாக அடி விழும்போதுதான் இதன் வீரியம் புரியும்” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.