இலங்கை

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். 

பாராளுமன்ற வளாகத்தில் இன்று புதன்கிழமை 22 பேர் கொண்ட அரச கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் இடம்பெற்றபோது, திஸ்ஸ விதாரண அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (CoPE) முதலாவது கூட்டத்தில், அதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.