இலங்கை

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் தற்போது (இன்று சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. 

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து விடுத்த அழைப்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

எனினும், அப்பகுதியில் பேரூந்துகளில் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ள பொலிஸார், உண்ணாவிரதிகளிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார்கள். எதற்காக இங்கு கூடியுள்ளீர்கள்? என அவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பிய போது, “அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக” என அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.

அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களைச் சேகரித்த பொலிஸார், அவர்களை காணொளியிலும் படம் பிடித்தார்கள். தொடர்ந்தும் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் நிற்கின்ற போதிலும், உண்ணாவிரதப் போராட்டம் அமைதியாக தொடர்கிறது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.