இலங்கை

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு சிறந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயக தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியல்வாதிகளும் மனிதர்களே என்று நான் தெரிவித்துள்ளேன். வேறு எவரும் அவ்வாறு சொல்வதை நான் கேட்கவில்லை. பாலில் குளித்த அரசியல்வாதிகளைக் கண்டுபிடிக்க முடியாது. அரசியல் எமது சமூகத்தின் ஒரு பகுதி. ஜனநாயகத்தின் ஊடாக சகலதையும் செய்ய முடியும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயகம் என்பது மற்றும் ஒருவரை கௌரவப்படுத்துவதும், அவரின் கருத்துக்களுக்கு இடமளிப்பதாகும். 78வது அரசியல் அமைப்புக்கு பொது மக்களின் கருத்துக்கள் பெறப்படவில்லை. 13வது அரசியலமைப்பு பெறுமதியனதும், முக்கியமானதாகும். 17க்கும் மக்கள் கருத்து பெறப்படவில்லை. அதேபோல் 18க்கும் 19க்கும் மக்கள் விருப்பம் பெறப்படவில்லை. நான் இன்னும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுவதால் 20 குறித்தும் 19 குறித்தும் பேச விரும்பவில்லை. மொத்தத்தில் புதிய அரசியலமைப்பு சிறந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கின்றேன். ஜனநாயகத்தை மையப்படுத்திய அரசியல் அமைப்பு ஒன்றே உருவாக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.