இலங்கை

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் கவலை வெளியிட்டுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் தனது கவலைகைளை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் இன்று வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ள அறிக்கையிலேயே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் கரிசனைகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையிலும் ஜெனீவாவிலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் ஏனையவர்கள் கண்காணிக்கப்படுவது குறித்த தனது கவலையை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.

மனித உரிமை பேரவையின் 43வது அமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து பயணித்தவர்களும் கலந்துகொண்டுவிட்டு இலங்கை திரும்பியவர்களும் விசாரணை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மார்ச்சில் இடம்பெற்ற மனித உரிமை பேரவை அமர்வின் போது தாங்கள் கண்காணிக்கப்பட்டதாக பல அமைப்புகள் தெரிவித்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 டிசம்பரில் மனித உரிமை விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் இந்த வகையான அச்சுறுத்தல்கள் பழிவாங்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு எழுத்துவடிவில் கொண்டுவந்துள்ளார் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர் என்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு கிடைத்துள்ளது என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தொடர்ந்தும் விஜயம் மேற்கொள்வது, புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் அமைப்புகளிடம் அவர்களின் செயற்பாடுகள் ஐக்கிய நாடுகளுடன் தொடர்பு பணியாளர்களின் விபரங்கள் குறித்து விசாரணை செய்வது போன்றவை இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.