இலங்கை

கொரோனா வைரஸ் நெருக்கடியை உச்ச அளவில் கட்டுப்படுத்திய நாடு என்ற வகையில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலையிலும் உரியவாறு கட்டுப்படுத்த முடியுமென்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். 

“தற்போது உருவாகியுள்ள வைரஸ் தொற்று சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உச்ச அளவில் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ஆகவே மக்கள் அஞ்சத்தேவையில்லை. அதேவேளை, நாட்டை முடக்காமல் பொருளாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளதால் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதுடன் பொறுப்புடன் நடந்து முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரமேஸ் பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இதற்கு முன்னர் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை உருவாகியபோது அரசாங்கம் 60 இலட்சம் குடும்பங்களுக்கு சுமார் 60 பில்லியன் நிதியை நிவாரணமாக வழங்கியது.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு சுகாதார துறையினரின் வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படவேண்டுமென்பதே குறிப்பாக நாட்டை முடக்கி பொருளாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக அவசியமாகவுள்ளது. எதிர்வரும் காலங்களில் மக்கள் தனித்தனியே தத்தமது சுகாதார நிலைமைகளில் கவனம் செலுத்தவேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்படுவதுடன் சுகாதார துறையினர் மற்றும் அரசாங்கம் விடுக்கும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியமாகும்.

மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களில் குறித்த தொழிற்சாலை சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதுடன் வைரஸ் தொற்று உருவாகியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தொழில் ஆணையாளரின் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளார். நாம் அதன் ஆரம்பத்தை இனங்கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. தற்போது இனங்காணப்பட்டுள்ள வைரஸ் தொற்று நோயாளர்களின் பெரும்பாலானோர் உரிய கொத்தணிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினர் தெளிவாக இனங்கண்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி வரை முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 1397 ஆகும். தற்போது மேற்படி கொத்தணி சூழலில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதுவரை 24,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10,281 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தினமும் 7,000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 26 வைத்தியசாலைகளில் வைரஸ்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது. அரசாங்கம் மேற்படி நிலைமை முகாமைத்துவம் செய்வதற்கு உச்சளவு பங்களிப்பை செய்கிறது. அதனால் மக்கள் அஞ்சத் தேவையில்லை.” என்றுள்ளார்.

 

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.