இலங்கை

அரசியலமைப்பில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் தமது எதிர்ப்புக்களைக் காட்டுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அம்பாறைக்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்த அவர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் செயலமர்வு எம்மால் நடாத்தப்பட்டது. அம்பாறை காரைதீவு பகுதியிலும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து இத்திருத்தம் குறித்து கலந்துரையாடியுள்ளோம். இப்புதிய திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச்செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

ஏனெனில் இத்திருத்தமானது ஜனநாயக விரோத செயலாக உள்ளது. இதனை நிறைவேற்ற நாங்கள் அனுமதித்தால் இந்நாட்டில் ஜனாநாயக கட்டமைப்பினை பேணாது மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாமல் போகும். அது போன்று நிலம் சம்பந்தமான பல திட்டங்களையும் அரசாங்கம் தற்போது அமுல்படுத்தி வருகின்றது. எனவே தான் இத்திருத்தத்தை நிறைவேற்றாமல் ஜனநாயக பண்பினை பேண வேண்டியது எமது கடமையாக உள்ளது. எனவே பொறுத்திருந்து பாருங்கள்.” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.