இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் சுற்றினை தேர்தலை வெற்றி கொள்வதற்கும், தற்போது ஆரம்பித்துள்ள இரண்டாவது சுற்றை 20வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். 

அத்துடன், கொரோனா தொற்று அலை நாட்டில் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பல பகுதிகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே கொரோனா இரண்டாம் சுற்றாக பரலவடைய முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் நிபந்தனைகளற்ற ஒத்துழைப்பினை எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு வழங்குகிறோம் என ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் பரவலடைந்த காலத்தில் அரசாங்கம் பொதுத்தேர்தலை வெற்றிக் கொள்ளும் நோக்கில் அரசியல்வாதிகள் ஊடாக மக்களுக்கு ஐயாயிரம் ரூபாயை வழங்கியது.

ஆனால், தற்போது தேர்தல் ஏதும் கிடையாது. தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.