இலங்கை

தற்போது பேசுபொருளாகியுள்ள 20வது திருத்தச் சட்டமூலம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்திக்கவுள்ளனர். 

இந்தச் சந்திப்புக்கான அழைப்பினை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நாளை பிற்பகலில் இந்தச் சந்திப்பு நடைபெறவிருக்கின்றது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாவது, “தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 20வது திருத்தம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்படும்

ஏற்கனவே நாம் சந்தித்துப் பேசியிருக்கின்றோம். ஒரு உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தால் என்பவற்றை இணைந்து நடத்தியிருக்கின்றோம். இந்த நிலையில் அடுத்த கட்டச் செயற்பாடுகளையிட்டு நாம் ஆராய வேண்டியிருக்கின்றது. குறிப்பாக 20வது திருத்தச் சட்டம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பன குறித்து மற்றைய கட்சிகளின் கருத்துக்களை அறிய வேண்டியுள்ளது.

அதனைவிட தமிழ் மக்களுடைய உரித்துக்கள், அதற்கான என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. ஒன்றாக இணைந்து செயற்படக் கூடிய இந்த சந்தர்ப்பத்தில் அடுத்த கட்டமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையிட்டு நாளைய சந்திப்பில் முக்கியமாக ஆராயவுள்ளோம்” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.