இலங்கை

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் நாட்கள் மிகவும் தீர்மானமிக்கது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பிலும் நோய் அறிகுறிகள் இருப்பினும் உடனடியாக சுகாதார பிரிவிடம் அறிவித்து ஆலோசனை பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் மற்றும் நெருங்கி செயற்பட்டவர்களுக்கு தேவையான வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அவசியமான அளவு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அதன் அவசியம் அதிகரித்தால் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை வரம்பை எட்டியுள்ளமையினால் பல வைத்தியசாலைகள் சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் தற்போதைய நிலைமை எதிர்வரும் வாரங்களுக்குள் சீராகுமா? என இராணுவத் தளபதியிடம் வினவிய போது, இது தொடர்பில் ஒன்றும் கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதே முக்கியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.