இலங்கை

மாவீரர் தின நிகழ்வுகளைத் தடையின்றி நடத்துவதற்காக தேவைப்பட்டால் அரசுடன் பேசுவதற்கும் தயாராக இருக்கிறோம் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும், மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாக தமிழ்த் தேசியத்தின்பால் உள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசுவதென தீர்மானித்திருக்கிறோம்.

அத்துடன், மாவீரர் தின நினைவுகூரல், இறந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி செழுத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். இந்நிலையில், மாவீரர் நாள் குறித்து அந்தந்த துயிலுமில்லப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதென தீனமானித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக எவ்வாறு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதனை அடுத்தவாரம் அறிக்கை மூலம் வெளியிடுவோம்.” என்றுள்ளார்.

 

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.