இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியுள்ளமை இன்னமும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனிய தூதரகங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்தும் பல சவால்களை உருவாக்கிவரும் நிலையில், நாங்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம், இந்த சந்திப்பின்போது இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க சகாக்கள் என்ற அடிப்படையில் இலங்கைக்கான எங்கள் நீண்ட கால ஆதரவை வெளியிட்டோம்.” என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் இலங்கை ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகங்களின் மீதும் நேரடி வெளிநாட்டு முதலீட்டின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பிராந்தியத்தின் பொருளாதார தளமாக மாறும், இலங்கையின் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இலங்கையின் ஏற்றுமதியிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

நீடித்த இறக்குமதி தடை சர்வதேச வர்த்தக அமைப்பின் விதிமுறைகளிற்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியது தொடர்ந்தும் கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியம் மேலும் கூறியுள்ளது.

 

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.