இலங்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு மாநகரம் பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக என கொழும்பு மாநகர சபையின் தலைவர் ரோசி சேனநாயக்க கவலை வெளியிட்டுள்ளார். 

“கொழும்பு நகரில் முடக்கப்பட்ட பகுதிகளிற்குள் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களிற்கு உதவி தேவைப்படுகின்றது. அவர்கள் தங்கள் நாளாந்த வருமானத்தை பெறும் நிலையை இழந்துள்ளனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரானா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பின் சில பகுதிகள் சில வாரங்களாக முற்றுமுழுதாக முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, ரோசி சேனநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கொழும்பு நகரத்தின் நிலைமையை நன்கு அறிந்ததன் காரணமாகவும் நகரத்தின் சார்பாக மாத்திரம் கருத்து தெரிவிப்பதாலுமே நான் நகரத்தை முடக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.

கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொள்வது, கண்டுபிடிப்பது அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பது தனிமைப்படுத்தலை முன்னெடுப்பது போன்றவற்றிற்காக கொழும்பு மாநகர சபையின் அரசாங்கத்தின் வளங்களை சாத்தியமான அளவிற்கு அப்பால் பயன்படுத்திவிட்டோம்.

நகரத்தை முடக்குவது, கொழும்பு நகரில் ஒழுங்குபடுத்தப்பட்ட அடிப்படையில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வதற்கும் நோயாளிகளையும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் கண்டுபிடிப்பதற்கு உதவும்

இதன் காரணமாக அதிகளவு மக்கள் நெருக்கமாக வாழும் நகரில் வைரஸ் பரவலை தடுக்க முடியும். நகரத்திலிருந்து பரவுவதை தடுக்க முடியும்.

நகரத்தினை முடக்கினால் அதிகளவு சோதனைகள், இனங்கானல் நடவடிக்கைகள் தனிமைப்படுத்தல்கள் மூலம் நிலைமையை விரைவில் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரலாம், கூடியவிரைவில் இயல்பு நிலையை ஏற்படுத்தலாம், இதன் மூலம் நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பமுடியும்.

கொழும்பு நகரமேயர் என்ற அடிப்படையில் கொழும்பின் ஒவ்வொரு பிரஜையையும் கொழும்பிற்கு வரும் ஒவ்வொருவரையும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறும் அரசாங்கம் இந்த சவாலை எதிர்கொள்ள உதவுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.


நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் கொரோனாவைரஸ் நோயாளியாகயிருக்க கூடும் என கருதுவதும் உரிய பாதுகாப்புடன் செயற்படுவதுமே அதிகளவிற்கு பதிலளிக்ககூடிய வழிமுறையாகும்.

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக கொழும்பு நகரம் பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கின்றது. கொரோனா வைரசின் பொருளாதார ரீதியிலான தாக்கம் காரணமாக வெளியில் சொல்லப்படாத துயரங்களை துயரங்களை அனுபவிக்கும் எங்கள் சக குடியிருப்பாளர்களிற்கு உதவுமாறு சிறந்த பொருளாதார நிலையில் உள்ளவர்களிடம நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த நெருக்கடியான தருணத்தில் உங்கள் அயலவர்களிற்கு எவ்வாறு உதவலாம் என்பத குறித்து சிந்தியுங்கள். கொழும்பு நகரில் முடக்கப்பட்ட பகுதிகளிற்குள் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களிற்கு உதவி தேவைப்படுகின்றது அவர்கள் தங்கள் நாளாந்த வருமானத்தை பெறும் நிலையை இழந்துள்ளனர்.” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.