இலங்கை

வில்பத்து சரணாலய பகுதியில், 2500 ஏக்கருக்கான மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிப்பதற்காகச் சுமார் 50 கோடி ரூபா நிதியை, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் செலுத்த வேண்டியுள்ளதாக வன பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

“வில்பத்து சரணாலயத்தை அண்மித்த பகுதியில் சுமார் 2500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மரங்களை மீள நடுவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இரண்டு மாதங்களுக்குள் செலவிடப்படும் தொகையை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிதித் தொகை ரிஷாட் பதியுதீனின் தனிப்பட்ட நிதியிலிருந்து செலவிட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வில்பத்து சரணாலயத்தில் மரங்களை மீள நடுவதற்காக கணிப்பிடப்பட்ட அறிக்கை, ரிஷாத் பதியுதீனுக்கும், நீதிமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளோம்.” என்றும் வன பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நிலத்தைப் பதப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு, குறைந்தது ஐந்து வருடங்களாவது அந்த வனப் பகுதியைப் பராமரிக்க வேண்டும். 2500 ஏக்கருக்கான மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிப்பதற்காகச் சுமார் 50 கோடி ரூபா நிதியை, ரிஷாத் பதியுதீன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2500 ஏக்கர் நிலப்பரப்புக்கு நடுவதற்கான மரக்கன்றுகள் எம்மிடம் கிடையாது. புதிதாக மரக்கன்றுகளை வளர்ப்பதற்காகத் தவறணை தயாரிக்கப்பட வேண்டும்.” என்றுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.