இலங்கை

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரங்களைக் கையாள்வதற்காக ஆராய்வுக் குழுவொன்றை விரைவில் நியமிக்கவுள்ளோம்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

“குறித்த குழுவில் எம்மோடு சேர்ந்தவர்களை விட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்ற பலர் இடம்பெறுவார்கள். அக் குழு அங்கத்தவர்கள் குறித்த ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் வாரந்தம் வெளியிடும் கேள்வி -பதில் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கேள்வி :- 2021 மார்ச் மாதம் வரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா? அதற்கான ஆயத்தங்கள் ஏதும் செய்துள்ளீர்களா?

பதில் :- தற்போதைய கொரோனா காலத்தில் திட்டமிடுவதும் அதனை நடைமுறைப்படுத்துவதும் சற்றுக் கடினமாகவே இருக்கின்றன. நான் கலந்துகொள்வது பற்றி பின்னர் அறிவிப்பேன். எனினும் நாங்கள் இது பற்றி தற்போது நினைத்திருப்பதைப் பற்றிக் கூறுகின்றேன்.

நாங்கள் விரைவில் ஒரு முக்கியமான ஆராய்வுக் குழுவை நியமிக்க பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம். குறித்த குழுவில் எம்மோடு சேர்ந்தவர்களை விட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்ற பலர் இடம்பெறுவார்கள். அக் குழு அங்கத்தவர்கள் குறித்த ஐக்கியநாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் அலுவலர்களைச் சந்திப்பார்கள். சர்வதேச நிறுவன அதிகாரிகளைச் சந்திப்பார்கள். சந்தித்து ஏன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

அத்துடன் அவர்களுடன் சேர்ந்து ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றி பேச வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. அதாவது யுத்த குற்ற சான்றுகளைச் சேகரித்து பாதுகாப்பாக சேமித்து வைத்தல், எந்த வகையில் குற்றம் புரிந்த இலங்கையின் அரசியல் தலைவர்களையும், யுத்த கால படையணித் தலைவர்களையும் சர்வதேச நீதித்துறைப் பொறிமுறைகளுக்குள் கொண்டு செல்வது பற்றியும் ஆராய வேண்டியுள்ளது. போகப் போக விபரங்களை நான் தருவேன்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.