இலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 99 மேலதிக வாக்குகளினால் நேற்று சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் வழங்கப்பட்டன.

நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் நவம்பர் 18ஆம் திகதி முதல் இன்று 21ஆம் திகதி வரை வரவு – செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூன்றாம் வாசிப்பு வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் ஆரம்பமாகி டிசம்பர் 10ஆம் திகதி வரை நடத்தப்படும். டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

2021ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பின்னர், ஒக்டோபர் 20ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் இந்த வரவு செலவுத்திட்டம் இந்நாட்டின் 75வது வரவு –செலவுத் திட்ட அறிக்கையாகும்.

2021ஆம் நிதி ஆண்டிற்காக 2,678 பில்லியன் ரூபா ஒதுக்குவதற்கும், இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ 2,900 பில்லியன் ரூபா வரையறைக்கு உட்பட்டதாகக் கடன்களைத் திரட்டுவதற்காகவும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.