இலங்கை

நீதிமன்றங்களின் ஊடாக எத்தனை தடைக் கட்டளையை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும், எமது மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. 

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27ஆம் திகதி) தமிழ் மக்கள் இல்லங்களில் மாலை 6.05இற்கு நினைவுகூரலை மேற்கொள்ளுமாறும் தமிழ்த் தேசியக் கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2020ஆம் ஆண்டு மாவீரர் நாள் தொடர்பாக எட்டுக் கட்சிகள் சேர்ந்து கலந்துரையாடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களை நினைவு கூர்ந்து நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை துயிலுமில்லங்களிலும் வீடுகளிலும் அஞ்சலித்து வந்துள்ளோம். இந்த நினைவு கூரல்களுக்குத் தடைவிதிக்குமாறு வடக்கு கிழக்கில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையாகும். அதேவேளை, தென்னிலங்கையில் பாரிய அளவில் பரவியிருக்கும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தனது தீவிரத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது.

உலகளாவிய உயிர்கொல்லியாக தீவிரமடைந்திருக்கும் கொரோனா தொற்றினைப் பொறுத்தமட்டில் எமது மக்களின் பாதுகாப்புத் தொடர்பாக எமது அனைவருக்கும் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்திருக்கின்றோம்.

மாவீரர் நினைவு அஞ்சலி என்பது எமது அனைவரினதும் உணர்வுகளொடு இணைந்திருக்கும் முக்கியமான நிகழ்வு என்ற அடிப்படையில், அஞ்சலி செலுத்த வேண்டிய எமது தார்மீகக் கடமை என்றநிலையில் இதனை எந்த சூழ்நிலையிலும் நாம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.

சில வருடங்களாக அனுமதிக்கப்பட்ட இந்நிகழ்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை ஏற்றுக்கொள்ளபட முடியாதாக அமைந்திருக்கிறது.

எத்தனை தடைக் கட்டளையை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும், மரணித்த உறவுகளுக்கு நாம் அஞ்சலி செலுத்துவதற்கு எமக்குள்ள அடிப்படை உரிமையை மறுத்து நிற்க முடியாது.

இந்நிலையில், மாவீரர் நினைவுகூரல்களை தமிழர் தாயகம் எங்கும் மக்கள் தமது இல்லங்களில் இருந்தே முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம். வழக்கம்போல மாலை 6.05இற்கு தமது இல்லங்களில் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துமாறு மக்களைக் கோருகின்றோம்” என்றுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.