இலங்கை

வடக்கு மாகாணத்தில் 84 கொரோனா தொற்றாளர்கள் மட்டுமே, கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இதன்படி, மார்ச் முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 17 நோயாளர்களும், ஒக்டோபரில் 39 பேரும், நவம்பரில் 27 பேரும், டிசெம்பரில் இன்றுவரை ஒருவர் என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 13 பேரும், யாழ்ப்பாணத்தில் இருந்து எட்டுப் பேரும், மன்னாரில் இருந்து நால்வரும், முல்லைத்தீவில் இருந்து இருவரும் என மொத்தம் 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஆய்வுகூடங்களில் ஒக்டோபரில் ஏழாயிரத்து 124 பி.சி.ஆர். பரிசோதனைகளும், நவம்பரில் எட்டாயிரத்து 69 பி.சி.ஆர். பரிசோதனைகளும், கொழும்பு அநுராதபுரம் ஆய்வுகூடத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், வடக்கு மாகாணத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மருதங்கேணி வைத்தியசாலை, கோப்பாய் கல்வியற் கல்லூரி மற்றும் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் மாகாண தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியன இயங்கி வருகின்றன.

இதில், மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் தற்போது 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.