இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போதும் தலைவர் தானே என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி உத்தியோகபூர்வமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலி முகத்திடல் முன்றலிலுள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் உருவச்சிலைக்கருகில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முன்னாள் பிரதமர் அமரர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் 122ஆவது நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று இரண்டு தடவை நடைபெற்றன. நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அவரது சகோதரி சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் தமது தந்தையாரின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அன்னாரின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் தாம் இரண்டு வருடங்களுக்கு முன் குறிப்பிட்டவை தற்போது உண்மையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போது எந்தவொரு முறையான பயணமும் கிடையாது. அதன் செயற்பாடுகள் சரியா? பிழையா? என்பதை என்னால் கூற முடியாது. கட்சியில் தற்போது சட்டவிரோதமாக ஒருவர் தலைவர் பதவியை வகிக்கின்றார்.

கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதை நான் ஒரு வருடத்துக்கு முன்பே எதிர்வு கூறி இருந்தேன். எவருடனும் சேர்ந்து நாம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை.கட்சியை பலப்படுத்திக் கொண்டு தனியான பயணத்தில் முன்னோக்கி செல்வோமென நான் கூறியிருந்தேன். எனினும் அதன் பிரதி பலனை காண முடிகிறது என்றார்.

அதன் காரணமாகவே தாங்கள் கட்சியிலிருந்து விலகிக் கொண்டீர்களென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் கட்சியிலிருந்து விலகவில்லை கட்சியில் நிரந்தரமாக இருப்பேன். இன்றும் நான்தான் அந்தக் கட்சியின் தலைவர். கட்சியின் ஆலோசகராகவும் உள்ளேன். அந்தக் கட்சியின் அரசியல் குழுவிலும் நான் இடம்பெற்றுள்ளேன். எனினும் எந்த ஒரு கூட்டத்திற்கும் எனக்கு அழைப்பு விடுப்பதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.