இலங்கை

“யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மேலிட அழுத்தங்களினாலேயே, இடித்து அழிக்கப்பட்டது.” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். 

“எனினும், நினைவுத் தூபி இடிக்கப்பட்டதும், நிலைமை மோசமானதை அடுத்து சம்பந்தப்பட்ட தரப்புக்கள், தமக்கும் தூபி இடிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறுகின்றன. ஆயினும், பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தின் போது, தூபியை இடிக்குமாறு தனக்கு வழங்கப்பட்ட ஆணைகள், அழுத்தங்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவேன்.” என்றும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

“அத்தோடு, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் எனக்கும் கவலையுண்டு. மாணவர்களினதும் மக்களினதும் உணர்வு எனக்கும் உண்டு. விரைவில் சரியான வழிகளில் நினைவுத் தூபியை அமைக்க முயற்சிப்பேன்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவை சந்தித்துப் பேசினார். இதன்போதே, துணைவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.