யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீளக் கட்டுவதற்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் அடிக்கல் நாட்டப்படும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக வாசலில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். அவர்களை இன்று திங்கட்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சந்தித்து உரையாடும் போதே, துணைவேந்தர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.