யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு –கிழக்கு பூராகவும் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட தரப்புக்கள் இணைந்து விடுத்துள்ள ஹர்த்தலுக்கான அழைப்பிற்கு, முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.