இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஒரு பொது விதி உள்ளது. அது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பல்கலைக்கழக வளாகத்திலும் எந்தவொரு நினைவுச் சின்னத்தை அல்லது சிலையை அமைக்க முடியாதென அது கூறுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்த நினைவுத்தூபி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி கட்டப்பட்ட ஒன்றாகும் என்பதால் அதை அகற்ற வேண்டியிருந்தது. இந்த நினைவுத்தூபி ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்பதால் அது குறித்து வாதிடுவதில் எந்தப் பயனும் இல்லை.” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.