இலங்கை

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அதனை இடைநிறுத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு இன்று சுற்றறிக்கை மூலம் பணிக்கப்பட்டதாக ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவசர தேவை ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து, அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வருபவர்களை சுயதனிமைப்படுத்த முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.