முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியில் இராணுவத்தினரின் ஆதரவுடன் தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க இதனை ஆரம்பித்து வைத்துள்ளார். தொல்லியல் திணக்கள அதிகாரிகள் உட்பட படைத்தரப்பினரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
குருந்தூர் மலைபகுதிக்கு புத்தர்சிலை கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டள்ள நிலையில், இராணுவ பிரசன்னத்துடன் சிவன் கோவில் அகற்றப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.