இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கான தனது பதிலை இலங்கை புதன்கிழமை சமர்ப்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போர் நடவடிக்கைகள் குறித்த இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கும் என தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர், இதுவரை நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகள் குறித்தும் அரசாங்கம் பதிலளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக இன்னொரு தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கைக்கு ஆதரவளிக்கு நட்பு நாடுகளையும் ஒத்த நிலைப்பாடுகளை கொண்ட நாடுகளையும் கேட்டுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், ஆனால் நாங்கள் இது குறித்த இன்னமும் முடிவெடுக்கவில்லை புதிய தீர்மானம் கிடைப்பதற்காக காத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.