“இலங்கையில் யுத்தத்தின் தீமையை ஏற்படுத்தக்கூடிய பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பதற்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகளில் மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.” என்று இலங்கை தொடர்பிலான கூட்டு நாடுகள் தெரிவித்துள்ளன.
கனடா, ஜேர்மனி, பிரித்தானியா, மலாவி, மொன்டினீக்ரோ உள்ளிட்ட நாடுகள் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளன.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமாதானம் ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பையும் இலங்கை தொடர்பிலான கூட்டுநாடுகள் வெளியிட்டுள்ளன.
உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், நிலக்கண்ணிவெடிகளை அகற்றுதல், நிலங்களை மீள கையளித்தல், மீள்குடியேற்றம் ஆகியவற்றில் காணப்பட்ட முன்னேற்றத்தை அங்கீகரித்து வரவேற்பதாக இலங்கை தொடர்பிலான முகன்மை குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை யுத்தத்தின் யுத்தத்தின் தீமையை ஏற்படுத்தக்கூடிய பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பதற்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என இலங்கை தொடர்பிலான கூட்டு நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கையை இந்த மாதம் ஜெனீவா அமர்வில் ஆராயவுள்ளதாக இலங்கை தொடர்பிலான கூட்டு நாடுகள் தெரிவித்துள்ளன.
மனித உரிமை பேரவைக்கு தயார் செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை தொடர்பிலான கூட்டு நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளன.