இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தொடர் போராட்டங்களை நடத்திவரும் உறவுகள், கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை தீச்சட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடும் மழைக்கு மத்தியிலும் தீச்சட்டிப் போராட்டம் காலை 10.00 அணிக்கு ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த தீச்சட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீச்சட்டி பேரணியானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி, ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் சென்றடைந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், தமக்கான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, சர்வதேசமே பதில் சொல், வேண்டும் வேண்டும் உறவுகள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தி பிரதான கட்சிகளான திமுக, அதிமுக , ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதிப் பங்கீடுகளிலும் ஈடுபட்டிருக்க, நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதற்குமான தமது 234 வேட்பாளர்களை உறுதிசெய்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ந் திக தி தேர்தல் நடப்பதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள், கூட்டணிகள் அமைப்பதிலும், ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு வடக்கு நைஜீரியாவின் ஷம்ஃபரா மாகாணத்தின் போர்டிங் கல்லூரியில் இருந்து கடத்தப் பட்ட அனைத்து 279 மாணவியரும் விடுவிக்கப் பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பெரும் தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் பின்லாந்தில் மீண்டும் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.