இலங்கை

“மக்களுக்குச் சார்பான கொள்கை ரீதியான தீர்மானங்களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான இழுபறியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்டங்களைச் செயல்படுத்துவதில் வன விலங்கு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வீதிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களின் பொறுப்பான அதிகாரிகள் ஒரு கூட்டு முடிவுக்கு வர வேண்டியதன் அவசியம். அத்துடன் காணிப் பயன்பாடு குறித்து முறையான திட்டமிடல் இல்லாதது மக்களின் தவறு அல்ல. காணிப் பிரச்சினைகள் உட்படப் பல கிராமப்புற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்கும்போது அதிகாரிகள் களத்திற்குச் சென்று உண்மையான நிலைமையைப் பார்த்து தீர் மானங்களை எடுப்பது மிகவும் முக்கியமானது.” ” என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புத்தளம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கருவலகஸ்வெவ பிரதேச செயலக பிரிவிலுள்ள பலீகம கிராம சேவகர் பிரிவிலுள்ள நெலும்வெவ சனசமூக நிலைய வளாகத்தில் இடம்பெற்ற 11வது 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தி பிரதான கட்சிகளான திமுக, அதிமுக , ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதிப் பங்கீடுகளிலும் ஈடுபட்டிருக்க, நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதற்குமான தமது 234 வேட்பாளர்களை உறுதிசெய்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ந் திக தி தேர்தல் நடப்பதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள், கூட்டணிகள் அமைப்பதிலும், ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னால் அதிபர் நிக்கொலஸ் சர்கோஸிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வடக்கு நைஜீரியாவின் ஷம்ஃபரா மாகாணத்தின் போர்டிங் கல்லூரியில் இருந்து கடத்தப் பட்ட அனைத்து 279 மாணவியரும் விடுவிக்கப் பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.