“இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவம், கௌரவம், சமாதானம் ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து இந்திய மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பா.ஜ.க.வின் இளைஞர் அணி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2015 இல் பிரதமரான பின்னர் மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணம் சென்ற ஒரேயொரு இந்தியப் பிரதமர் அவர். உள்நாட்டு யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த சகோதர சகோதரிகளிற்கு நாங்கள் வீடுகளை வழங்கியுள்ளோம்.” என்றுள்ளார்.