இலங்கை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ள விடயம் தொடர்பில், அமைச்சர் அலி சப்ரியிடம் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும். இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. இதேவேளை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு திட்டமிட்டே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றம் சுமத்தியுள்ளது என விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்திலேயே இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.” என்றுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.