இலங்கை

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தனது கடமைகளை நிறைவேற்ற தவறிய பின்னரும் வெட்கமின்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார் என்றும் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டின் மீது தாக்குதல் இடம்பெற்றவேளை மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டிலிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள பேராயர், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவ திறன்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தாக்குதல் இடம்பெறலாம் என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க தவறிய சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபருக்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கவேண்டும் என மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதி அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது கத்தோலிக்க சமூகத்தை அவமானப்படுத்தும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் 21ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் கரிசனைகளிற்கு பதிலளிக்காவிட்டால் கத்தோலிக்க மக்கள் வீதியில் இறங்குவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.