இலங்கை

கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வோர் தொடர்பில் பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை என கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் பணிப்பாளரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

எனினும், சில வேளைகளில் குறிப்பின்றி அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டிய நிலமைக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி, எவ்வாறாயினும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஒரு வாரகாலமே உள்ள நிலையில், சுகாதார அமைச்சினால் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதை இனங்காண்பதற்கே அன்டிஜன் பரிசோதனைகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் இராணுவ தளபதிக் குறிப்பிட்டார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.